• வேலூர் மாநகராட்சி பணிகள் - மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

·        வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள், கழிவுநீர் நீரேற்று நிலையம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து  மாவட்ட  ஆட்சி தலைவர் ஆய்வு.

வேலூர் மாநகராட்சி, பாகாயம், தணிகாசலம் தெருவில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆகியவை  குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, கஸ்பா பள்ளி மைதானத்தை மேம்படுத்துவது குறித்தும், வேலூர் மாநகராட்சி, முத்து மண்டபம் அருகில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறையில் கழிவுநீர் உந்துசக்தி நிலையம் அமைக்கும் பணிகளையும், காகிதப்பட்டறை முதல் விருதம்பட்டு வரை கழிவுநீர் குழாய் எடுத்து செல்வதற்கான பாலம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வேலூர் மாநகராட்சி, காகிதப்பட்டறை பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, சர்க்கார் தோப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.