• வேலூர் போலியோ சொட்டு மருந்து முகாம்.

 ·         வேலூர் போலியோ சொட்டு மருந்து முகாம். 

·         வேலூர் சின்ன அல்லாபுரம் அங்கன்வாடி மையத்தில் காட்பாடி மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவங்கி வைத்தனர்.

            1 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை இளம்பிள்ளைவாத (போலியோ) நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதும் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.

           அதன்படி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மாவட்டம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

       வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து  முகாமினை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணா, காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் ஆகியோர் தொடங்கி வைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

            மேலும் முகாமில் விடுபடும் குழந்தைகளுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 4 வரை களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.

         எனவே, பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இம்முறையும் தவறாமல் சொட்டு மருந்து செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.