• வேலூர் ஊரக வளர்ச்சி துறை திட்டப் பணிகள் ஆலோசனை கூட்டம்.

 ·        வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்  நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

                இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II,  சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு திட்டம், 15-வது மத்திய நிதி குழு மான்ய  சுகாதார கட்டிடங்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  திட்டம்,  நமக்கு நாமே திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G), பிரதான் மந்திரி ஜென்ஜாதி ஆதிவாசி நியாய மகா  அபியான்  திட்டம் (PM-Janman) ஆகிய திட்டங்களின்கீழ் முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

                தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) (Swachh Bharat Mission - Grameen) கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய கழிவறைகள் அமைக்கும் பணிகள், பிளாஸ்டிக் சேமிப்பு மையங்கள் போன்ற  திட்டப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையங்கள், இடுகாடு அமைக்கும் பணி, சமையலறை, பால் சேமிப்பு மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சிமெண்ட் சாலைகள், பேவர் பிளாக் அமைத்தல், தடுப்பணைகள், கால்வாய்கள், சமுதயா கூடம் மற்றும் மரக்கன்று நடவு செய்தல் போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் அனுமதி அளிக்கப்பட்ட பயனாளிகளின் விவரங்கள் மற்றும் தற்பொழுதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடன் கேட்டறியப்பட்டது.

ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 15 வது மத்திய நிதிக்குழு, மாநில நிதிக்குழு மற்றும் பொது நிதி ஆகிய திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இக்கூட்டத்தில்  விவாதிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் விரிவாக களஆய்வு மேற்கொண்டு திட்டங்களை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, ஊரக வளர்ச்சி  செயற்பொறியாளர் அருண், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.