• அலிம்கோ மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கல்.

·        ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 260 மாற்று திறனாளிகளுக்கு ரூ.45.65 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 260 மாற்று திறனாளிகளுக்கு ரூ.45.65 இலட்சம் மதிப்பில்  உதவி உபகரணங்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் வேலூர் நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

               இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 260 பயனாளிகளுக்கு ரூ.45,65,583/- மதிப்பில் 404 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் 132 காதொலி  கருவிகள், 125 கற்பித்தல், கற்றல் கருவிகள், 57 ஊன்றுக்கோல்கள், 22 சக்கர நாற்காலிகள், 47 செயற்கை அவயங்கள், 6 நடைபயிற்சி ஊன்றுக்கோல்கள், பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு 3 கைபேசிகள், 7 பிரெய்லி உபகரணங்கள், தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1  உபகரணம், மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கான 1 சிறப்பு சக்கர நாற்காலி, 1 மூன்று சக்கர வாகனம் ஆகியவை வழங்கப்பட்டது-

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

       வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை அவர்களே மேற்கொள்ளும் வகையில் இந்த உபகரணங்கள் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இத்தகைய நல்ல ஒரு பணியை செய்து வரும் அலிம்கோ நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

        குறிப்பாக வேலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெறும் முகாம்களில் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் பங்கேற்று மாற்று திறனாளிகளின் கோரிக்கைகளை மாவட்ட மாற்று திறனாளி அலுவலகத்தின் வாயிலாக பெற்று அளவீடுகள் எடுக்கப்பட்டு நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, அலிம்கோ நிறுவன இளநிலை மேலாளர் ரிஷாப் மேஹரோத்ரா, மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.