• காட்பாடியில் திமுக சார்பில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.


 ·         தமிழக மனித வள மேம்பாடு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் காட்பாடியில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம். 

·         ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூண்டோடு கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு.

            (ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில்) பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போன்ற தமிழக வெற்றி கழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரின் வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது.

            அது தொடர்ந்து சர்ச்சையாக இருந்த நிலையில், குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையைப் பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

            இந்த நிலையில் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளின் சார்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தது. இதனை தொடர்ந்து திமுக தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்து, அவரை உடனடியாக பதவி விலக்க வேண்டுமென தெரிவித்திருந்தது. மேலும் அமைச்சரை கண்டித்து மாணவர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி அறிவித்திருந்தது.

            இதனை தொடர்ந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் பதவி நீக்கம் செய்ய கோரி திமுக ஆர்ப்பாட்டத்தை நடத்த மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தனர். இதனை அடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

     மேலும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து அனுமதி மீறி ஊர்வலமாக வந்து போலீஸாரின் தடையையும் மீறி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை மீது ஏறி நூற்றுக்கும் மேற்பட்ட திமுக-வினர் தமிழக வெற்றி கழக அரசையும், அமைச்சரை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தடையை மீறி மேடையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக-வினரை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

     இதனால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் காட்பாடியில் போலீசாரின் தடையையும் மீறி மேடை மீது ஏறி திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.