• பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று - லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவர் கைது.
· பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று வழங்க ரூ.900 லஞ்சம் வாங்கிய அரசு மருத்துவர் கைது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த அக்கிரெட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த ரங்கன் என்பவரின் மூன்று பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் அவர்களுக்கு பள்ளியில் உடல் தகுதி மற்றும் மருத்துவ சான்று கேட்டதால் பள்ளிகுப்பத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியுள்ளனர். பணியில் இருந்த அரசு மருத்துவர் வெங்கடலட்சுமி மருத்துவ சான்று வழங்க ஒரு பிள்ளைக்கு ரூ.300 என மூன்று பேருக்கு ரூ.900 லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து ரங்கன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். மருத்துவர் இந்த பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக அரசு மருத்துவர் வெங்கடலட்சுமியை பிடித்து, லஞ்சபணம் ரூ.900/-ஐ பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அரசு பெண் மருத்துவரை கைது செய்து வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்துள்ளனர்.

Comments
Post a Comment