• வேலூர் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்.
· காவிரி நீரை ஆதாரமாக கொண்ட வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாயில் 03.06.2026 முதல் 05.06.2026 வரை மூன்று நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பொதுமக்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்டு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிக,ள் 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றின் நீரினை ஆதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மேட்டூர் செக்கனூர் கதவனை நீர் மின் நிலையத்தில் 31.05.2026 முதல் 14.06.2026 வரை 15 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பராமரிப்பு பணியின் காரணமாக 31.05.2026 முதல் 14.06.2026 வரை 15 நாட்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 50 சதவீத அளவிற்கு மட்டுமே குடிநீர் வழங்க இயலும் என ஏற்கனவே செய்தி குறிப்பின் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 03.06.2026 முதல் 05.06.2026 வரை மூன்று நாட்களுக்கு வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பதிலாக உள்ளூர் நீர் ஆதாரங்களைக் கொண்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் 03.06.2026 முதல் 05.06.2026 வரை மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்டு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்று நாட்களுக்கு பிறகு 06.06.2026 முதல் 14.06.2026 வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 50 சதவீதமும், உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்டும் குடிநீர் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment