• பிச்சனூர் கைத்தறி பூங்கா - அமைச்சர் ஆய்வு.

·        பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்கா - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பிச்சனூர் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு துணி ரகங்களை பார்வையிட்டார். மேலும் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட தேசியக் கொடியை பார்வையிட்டார்.

பின்னர் மாண்புமிகு கைத்தறி தொழிலுள் மற்றும் கதர் துறை அமைச்சர் நெசவாளர்களிடம் கலந்துரையாடி கைத்தறி பூங்காவில் பணியாற்றி கொண்டிருந்த நெசவாளர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், பிச்சனூர் பகுதியில் சிங்காரவேலர் தொழிலாளர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா கடந்த 26.5.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.ந்த கைத்தறி பூங்காவில் ரூபாய் 30லட்சத்து 14 ஆயிரத்து 900 மதிப்பில் 50றிள் மற்றும் தறி உபகரணங்கள் அமைக்க நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டது

கைத்தறி பூங்காவில் தற்பொழுது 50 கைத்தறிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் கைத்தறி பட்டு சேலைகள் மற்றும் கைத்தறி லுங்கி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இக்கைத்தறி பூங்காவில் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் மற்றும் சதீஷ்குமார் சில்க்ஸ் தனியார் நிறுவனத்திற்கும் இடையே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா கட்டடத்தின் உட்கட்டு அமைப்புகளின் மூன்று ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கு நிபந்தனுடன் கூடிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2025-26-ம் தேதி ஆண்டில் கைத்தறி பூங்காவில் 7825 மீட்டர் பருத்தி லுங்கிகள், 273 மீட்டர் பருத்தி சேலைகள் மற்றும் 816 மீட்டர் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு 7,825 மீட்டர் பருத்தி லுங்கிகள்,  10.5 மீட்டர் பருத்தி சேலைகள் மற்றும் 811 மீட்டர் பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் நெசவாளர்களுக்கு கூலியாக ரூபாய் 17.26லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2026- 27-ம் நிதி ஆண்டில் 1565 மீட்டர் பருத்தி லுங்கிகள், 54.6 மீட்டர் பருத்தி சேலைகள் மற்றும் 163 மீட்டர் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு 1565 மீட்டர் பருத்தி லுங்கிகள், 2.1 மீட்டர் பருத்தி சேலைகள் மற்றும் 162 மீட்டர் பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் நெசவாளர்களுக்கு கூலியாக 3.44லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

தமிழ்நாடு முதலமைச்சர் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கைத்தறி துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கு என்னை பொறுப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

அதன் ஒரு பகுதியாக குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான இந்த கைத்தறி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். நம்முடைய மாநிலத்தில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தகைய தொழில் புரியும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். நெசவாளர்களின் தினக்கூலியை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக பட்டு சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 750,  லுங்கி உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு சிறிது குறைந்த கூலியும் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அலுவலர்களுடனும் நெசவாளர் பிரதிநிதிகள் உடனும் ஆலோசனை மேற்கொண்டு இந்த கூலி முறையாக வழங்கப்படுவது உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் போலியான உறுப்பினர்களை கொண்டு ஏதேனும் சங்கங்கள் செயல்பட்டால் அதன்மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இனிவரும் காலங்களில் நெசவாளர்களின் மூலம் கூட்டுறவு சங்கங்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்யப்படும் என கைத்தறி துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தெரிவித்தார்

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.தென்றல்குமார், க.சிந்து, மு.ம.வினோத்கண்ணன், மரு.ம.சுதாகர், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, கைத்தறி துறை மண்டல மேலாளர் ஸ்டாலின், உதவி இயக்குநர் விஜயலட்சுமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.