• சமூக சேவகர் விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.
· சமூக சேவகர் விருதினை பெற விண்ணப்பிக்கலாம்.
· 2026 ஆம் ஆண்டிற்கான சமூக சேவகர் விருதினை பெற வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய நபர்கள் (ம) தொண்டு நிறுவனங்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சிறந்த சமூக சேவகருக்கு ரூ. 50,000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதமும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதமும் வழங்கப்படுகிறது. எனவே சிறந்த சமூக சேவகர்(ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளை பெற்றிட தகுதியுள்ள நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் 01.06.2026 முதல் 19.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள்
1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2. குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
4. 19.06.2026க்கு பிறகு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்க இயலாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
5. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் இணையத்தில் பதிவு செய்த நபர்கள் தங்களுடைய முழுமையான கருத்துருக்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 4 வது மாடி. B Block, சத்துவாச்சாரி, வேலூர் என்ற அலுவலக முகவரியில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்காணும் தகுதிகள் உள்ள நபர்கள் இவ்விருது பெற இணையதளத்தில் 19.06.26-க்குள் பதிவு செய்து பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment