• காட்பாடி பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி.

·        காட்பாடியில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி.  

·        பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மாநில அரசு அனுமதியின்றி மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது

            வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் இளங்கோவன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

   இதில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     மேகதாதுவின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் பாஜக இணைந்து செயல்படுவதாக குற்றச்சாட்டிற்கு பதிலளித்து கூறுகையில்,

     மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கர்நாடகாவில் நடக்கும் உட்கட்சி பிரச்சணையில் தமிழகத்திற்கும் கர்நாடகவுக்கும் பகைமையை கர்நாடக முதல்வர்  சிவகுமார் ஏற்படுத்துகிறார். 

      இந்த ஒரு காரணத்திற்காக தமிழக முதல்வர் ஜோசப்விஜய் காங்கிரசுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என தூக்கி எறிந்திருக்க வேண்டும். நான் தூய சக்தி என அவர் சொல்வாரே ஆனால் காங்கிரஸ் கூட்டணியை தூக்கி எறிய வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளாக மேகதாது பிரச்சணை செல்கிறது.

     பாஜக ஆட்சியில் கர்நாடகத்தில் எடியூரப்பா தமிழகத்தின் அனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது என்றார். மேலும் மேகதாது மட்டுமின்றி காவிரியில் அணை கட்ட வேண்டுமென்றாலும் தமிழகத்தின் அனுமதியில்லாமல் கட்ட முடியாது என மத்திய அரசு தெளிவாக சொல்லியுள்ளது.

    மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப காவேரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசிடம் நாங்கள் மேகதாது அணை கட்ட அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளபோது சிவக்குமார் பொய் சொல்லியுள்ளார். ஆனால் முதல்வர் ஜோசப் விஜய் சாமிதரிசனம் செய்தார் ஏன் சிவக்குமாரை பார்த்து இதையெல்லாம் செய்ய கூடாது என கேட்கவில்லை.

     தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீரை குடித்தாலும் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது  பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்குதான் நஷ்டம். பாஜகவிலிருந்து யார் விலகுகிறார்களோ அவர்களுக்கு தான் நஷ்டம். பாஜக-வுக்கு எந்த நஷ்டமும் கிடையாது.

   தமிழகத்தில் மும்மொழி கொள்கை திட்டம் ஏற்றுகொள்ளபட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் சொல்லியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் திமுகவின் அமைச்சராக இருந்தாலும் தவெக அமைச்சராக இருந்தாலும் சரி மும்மொழி கொள்கை ஏற்றுகொள்ளபடமாட்டாது என்றால்,

            தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை தனியார் மெட்ரிக், சிபிஎஸ்சி எங்கும் கற்றுகொடுக்க கூடாது என உத்தரவு போடுங்கள். அதிகாரிகள் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து மூன்று மொழியை படிக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் அரசு பள்ளியில் மூன்று மொழி படிக்க கூடாது என்று சொல்கிறார்கள்.

     காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் பாஜக மீது உள்ள அச்சத்தில்தான் தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

     பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மாநில அரசு அனுமதியில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

         கேஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் சில இடங்களில் இயற்கை வளங்களை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் எடுக்கின்றனர். மக்கள் நலனுக்காக வேண்டாம் என்று சொன்னால் அதற்காக கஷ்டப்படுவதை மக்களே உணருவார்கள் என சொன்னார்.

பேட்டி: நாராயணன்திருப்பதி    (பாஜக செய்தி தொடர்பாளர்)

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.