• இடி, மின்னல்-ன்போது செய்யக்கூடியவை / செய்யக்கூடாதவை.

·        இடி மற்றும் மின்னல் தாக்கத்தின்போது தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள “ செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை” ஆகியவற்றை பொதுமக்கள்  பின்பற்றி இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்க்குமாறு  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

               தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை-2026 பருவகாலம் தொடங்கி மழை பெய்து வருகிறது. மேலும், எதிர்வரும் அக்டோபர் – 2026ம் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை-2026 பருவகாலம் தொடங்க உள்ளது. இந்த இரு பருவமழை காலங்களிலும் இடி மற்றும் மின்னல் ஆகியவற்றால் மனித உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு இடி மற்றும் மின்னல் தாக்கத்தின்போது பொதுமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து கீழ்கண்டவற்றை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.

மின்னல் நேரத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:-

1. உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.

Ø  இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகளை உடனே நிறுத்தவும்.

Ø  உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டிடம் அல்லது மூடப்பட்ட வாகனத்திற்கு செல்லுங்கள்

Ø  வயல்கள், படகுகள், கூரைகள் மற்றும் பிற திறந்த பகுதிகளை விட்டு விலகுங்கள்.

Ø  குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்திற்குள் அழைத்து செல்லவும்.

Ø  இறுதி இடி முழக்கத்திலிருந்து 30 நிமிடம் ஆகும் வரை வீட்டிற்குள் இருங்கள்.

2. ஆபத்தான இடங்களிலிருந்து விலகி இருங்கள்.

Ø  மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்க வேண்டாம்.

Ø  பேருந்து நிறுத்தங்கள், கொட்டகைகள், தகரக் கூரை அமைப்புகள் மற்றும் பிற திறந்தவெளி கூடாரங்களை தவிர்க்கவும்.

Ø  திறந்த வெளிகள், கடற்கரைகள், மலை உச்சி மற்றும் ஆற்றங்கரைகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவும்.

Ø  நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்கவும்.

Ø  உலோக வேலிகள், கம்பங்கள், வாயில்கள் மற்றும் மின்கம்பங்களிலிருந்து விலகி இருக்கவும்.

Ø  திறந்தவெளியில் இருப்பதை தவிர்க்கவும்.

3. உங்களால் தங்குமிடத்தை அடைய முடியாவிட்டால்

Ø  தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமருங்கள்.

Ø  தரையை தொடுவதை தவிர்க்கவும்.

Ø  தரையில் மல்லாந்து படுக்காதீர்கள்.

Ø  கைகளைத் தரையில் வைக்காதீர்கள்.

Ø  குழுவாக இருந்தால், இடைவெளிவிட்டு நில்லுங்கள்.

4. வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள்.

Ø  ஜன்னல், கதவு, பால்கனி மற்றும் வராண்டா அருகில் நிற்பதை தவிர்க்கவும்.

Ø  குழாய்கள், ஷவர்கள் அல்லது பிற நீர்க்குழாய் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

Ø  மின்சாதனங்களின் மின்இணைப்பை துண்டிக்கவும்.

Ø  செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோகச்சங்கிலியால் கட்டுவதை தவிர்க்கவும்.

Ø  வாகனத்தில் இருந்தால், ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருங்கள்.

5. மின்னல் தாக்கிய ஒருவருக்கு உதவுவது எப்படி.

Ø  மின்னல் தாக்கியவரிடம் மின்சாரம்  இருக்காது – அவரைத் தொடுவது பாதுகாப்பானது, அவரை பாதுகாப்பன, உலர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும்.

Ø  சுவாசம் மற்றும் நாடித்துடிப்பைச் சரிபார்க்கவும்.

Ø  அந்த நபர் சுவாசிக்கவில்லை என்றால், அவருக்கு சிபிஆர் (CPR) செய்ய தொடங்குங்கள்.

Ø  அவசர மருத்துவ சேவைகளை உடனடியாக அழைக்கவும்.

  6. தயராக இருங்கள்.

Ø  அதிகார்பூர்வ வானிலை எச்சரிக்கைகளையும், TN Alert மொபைல் செயலியையும் பின்பற்றவும்.

Ø  இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு இருக்கும்போது வெளிப்புற பணிகளைத் தவிர்க்கவும்.

Ø  கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்யவும்.

Ø  வீடுகளை சுற்றியுள்ள பலவீனமான கிளைகளையும், மரங்களையும் வெட்டி ஒழுங்குபடுத்தவும்.

7. இடி, மின்னலுக்கு பிறகு கவனமாக இருங்கள்.

Ø அறுந்துவிழுந்த மின்கம்பிகளையும், சேதமடைந்த மின்கம்பங்களையும் கவனிக்கவும். ஆபத்துக்களை உடனடியாகத் தெரிவிக்கவும்.

Ø மின்சாதனங்களை பயன்படுத்துவதற்கு முன் அவற்றை சரிபாரக்கவும்.

Ø வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.

                தமிழ்நாடு அரசால் மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, இடி மற்றும் மின்னல் தாக்கத்தின்போது பொதுமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை பின்பற்றி இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்க்குமாறு  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார். 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.