• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 601 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 601 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் செவித்திறன் குறைபாடுடைய 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.3,285/-வீதம் ரூ.9,855/- மதிப்பிலான காதொலி கருவிகளையும், இயக்கத்திறன் குறைபாடுடைய 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.11,445/- வீதம் ரூ.22,890/- மதிப்பிலான மூன்று சக்கர வண்டியும், 5 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.78,750/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 10 மாற்று திறனாளிகளுக்கு ரூ.1,11,495/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு தலா 5,500/- வீதம் ரூ.55,000/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment