• வேலூரில் பாமக சார்பில் பட்டாசு, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
· வேலூரில் பாமக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
· சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு அரசுக்கு நன்றி
வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் கலந்து கொண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என கூறி பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
பாமக பல ஆண்டு காலமாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போதுள்ள தமிழக அரசு பாமக-வின் கோரிக்கையை ஏற்று ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாமக மாநகர செயலாளர் சரவணன், நிர்வாகிகள் சசி, செந்தில்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட திரளான பாமக-வினர் கலந்துகொண்டனர்


Comments
Post a Comment