• தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறப்பு தொழில் கடன் முகாம்.

·        தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வேலூர் கிளை அலுவலகம் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்  30.06.2026 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசுநிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலூர் கிளை அலுவலகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்  30.06.2026 வரை வேலூர் கிளை அலுவலகம் அமைந்துள்ள (முகவரி எண்.73/A, காட்பாடி மெயின் ரோடு, (Vasan E.N.T. கிளினிக், - முதல் தளம், காந்தி நகர், வேலூர் - 632006) நடைபெற்று வருகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் வசதி திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) மூலம் திட்ட மதிப்பீட்டில் 95% வரை கால கடனாகவும், 25% முதலீட்டு மானியத்துடன் 3% வட்டி மானியமும் சேர்ந்து கடன் அனுமதி வழங்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்கீழ் (AABCS) SC/ST. தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பீட்டில் 35% முதலீட்டு மானியத்துடன் கடன் அனுமதி வழங்கப்படுகிறது. சேவை துறையில் காற்றாலை, சூரிய ஆற்றல் (Solar Plant) அமைப்பதற்கு கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் (Kalaingar Green Energy Scheme) உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களை (Manufacturing and Service Sector under MSME ) அமைப்பதற்கு கடன் அனுமதி வழங்கப்படுகிறது.

தகுதி பெறும் உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் 25% முதலீட்டு மானியமாக அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த குறு தொழில்களுக்கு தமிழக அரசின் மானியமாக 25% கூடுதல் மானியமாக 10% மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5% சிறப்பு மானியமாக வழங்கபட்டு வருகிறது. ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூடுதலாக 5% வட்டி மானியத்துடன் கடன் அனுமதி வழங்கப்படுகிறது.

புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் மற்றும் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும், மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு நடைமுறை மூலதனக் கடன் (Working Capital Term Loan) அனுமதியும் வழங்கப்படுகிறது.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்த முழு விலக்கு அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு : 9003987773 / 9445023485 / 7708517295 ன்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.