• இரங்காபுரம் நுண் உரம் செயலாக்கம் மையம்.

·        இரங்காபுரம் நுண் உரம்  செயலாக்கம் மையம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 22, இரங்காபுரத்தில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது ரங்காபுரம் நிலையத்தில் தினசரி சுமார் 3 டன் நகராட்சி திடக்கழிவுகள் (MSW)* இத்தொழில்நுட்பத்தின் மூலம் உரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. மக்கும்  குப்பைகளை  BSFL லார்வாக்களின் உதவியுடன் உயிரியல் முறையில் அதிக மதிப்புள்ள உயிரி உரம் மற்றும் கால்நடை/மீன் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களாக மாற்றும் இந்த தொழில்நுட்பம், பாரம்பரிய குப்பை மேடு மற்றும் திறந்த கம்போஸ்டிங் முறைகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் *கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திறன் கொண்டதாகும்*.

மேலும், தற்போது செயல்பட்டு வரும் அமைப்பை "Pile-Up" முறை மூலம் மேம்படுத்துவதன் மூலம், அதே கட்டமைப்பில் கூடுதலாக *50 முதல் 70 சதவீதம் வரை கழிவு சிகிச்சை திறனை அதிகரிக்க முடியும்*

இந்த BSFL தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகள்:

·        கரிமக் கழிவுகளின் அளவை 70% முதல் 80% வரை குறைக்கும் திறன்

·        மீத்தேன் மற்றும் பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் குறைக்கும் தன்மை

·        துர்நாற்றம் மற்றும் ஈக்கள் தொல்லையை குறைக்கும் திறன்

·        நிலப்பரப்பு தேவையை குறைக்கும் தொழில்நுட்பம்

·        குப்பையை வளமாக மாற்றும் சுற்றுச்சுழல் பொருளாதார முறை

·        உயிரி உரம் மற்றும் புரதச்சத்து நிறைந்த தீவன உற்பத்தி

·        நகராட்சி கழிவு மேலாண்மை செலவினத்தை குறைக்கும் வாய்ப்பு

·        கார்பன் கிரெடிட் மற்றும் காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பம்

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அவர்கள், தற்போதுள்ள கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் இத்தகைய புதிய உயிரியல் தொழில்நுட்பங்களின் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார். மேலும், நகராட்சி அளவில் இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும்  கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மண்டலம் 2 உதவி ஆணையர் பாலமுருகன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப், சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.