• வேலூரில் குழந்தை தொழிலாளர் உறுதிமொழி.

·         வேலூரில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு.

            வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

     கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

     ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஆட்சியர் லீலாஅலெக்ஸ் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதி மொழியை எடுத்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை உதவி அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.