• வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.
· அங்கான்வாடி மையம், மேல்நிலை பள்ளி மற்றும் தாயுமானவர் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அங்கான்வாடி மையம், மேல்நிலை பள்ளி மற்றும் தாயுமானவர் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி, டிட்டர்லைன் பகுதியில் உள்ள மாநகராட்சி உருது தொடக்க பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் உடல் எடை போன்ற விவரங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வேலூர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியில் தூய்மை பணிகள், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். முறையான குடிநீர் வசதி உள்ளதா எனவும், குளேரினேசன் முறையாக செய்யப்பட்டுள்ளதா எனவும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பயன்பாடற்ற பழைய பொருட்களை அகற்றவும் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, சிஎம்சி காலனி பகுதியில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் 65 முதல் 70 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள வயது முதிர்ந்தோருக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது பயனாளிகளிடம் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், பொருட்கள் விநியோகம் செய்யும்போது கைரேகை முறையாக பதிவு செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மு.சாந்தி பிரியதரிசினி, துணைபதிவாளர்கள் சத்யநாராயணன், சுவாதி உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment