• அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்.
· அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் அவர்களின் கடிதம் ந.க. எண்.42791/2023/SBM(G)-2. நாள்: 22.05.2026 மற்றும் ந.க. எண்.28645/2026/CFC 1.2. நாள்: 29.05.2026-ல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 05.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய
கூட்டப்பொருள் விவரம்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக சுற்றுசூழல் தினம் 2026-யை முன்னிட்டு 01.06.2026 முதல் 0506.2026 வரையில்“காலநிலை நடவடிக்கை (Climate Action)” என்ற கருப்பொருளுடன் “Swachh Gaon, Surakshit Jalvayu” (தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை) எனும் பிரச்சாரத்தின் சாதனைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 குறித்த விழிப்புணர்வு தொடர்பாக விவாதித்தல்.
மேற்படி, இச்சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உத்தரவிடப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment