• வேலூர் மாவட்ட கால்நடைகள் விவரங்களை பதிவேற்றம்.
· வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் விவரங்களை தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் பாரத் பசுதான் போர்ட்டலில் பதிவேற்றம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் விவரங்களை தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு இந்திய அரசால் தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் (NDLM) பாரத் பசுதான் போர்ட்டலில் (Bharat Pashudhan Portal) பதிவேற்றம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரவு தளத்தின் மூலம் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் எளிதில் சந்தை மற்றும் சேவை அமைப்புகளை செயல்படுத்த உதவுகிறது.
விவசாயிகளின் கால்நடைகளுக்கு 12 இலக்க அடையாளக் குறியீடு (BAR CODE) கொண்ட காதுவில்லை பொருத்தப்பட்டு மின்னணு தகவல் மூலம் கால்நடைகளின் உரிமையாளர் விவரம், கால்நடைகளின் காப்பீடு விவரம், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி பணிகள், நோயின் விவரம் மற்றும் பால் உற்பத்தி போன்ற அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரசு அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களையும் டிஜிட்டல் முறையின் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்ள இயலும்.
இத்தரவு தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு கால்நடை உரிமையாளர்களின் கைப்பேசி மற்றும் ஆதார் எண்களை ஒருங்கிணைத்து உரிமையாளரின் கைபேசி எண்ணில் வெளிப்படும் கடவுச்சொல்லின் மூலம் கால்நடைகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது இதன் மூலம் கால்நடைகள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் போது கால்நடை பற்றிய முழு விவரமும் அறிந்து கொள்ள இயலும். எனவே தங்களது கிராமங்களுக்கு வரும் கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்களுக்கு கடவு சொல்லை பகிர்ந்தும், அவர்கள் கோரும் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால்நடை வளர்க்கும் விவசாயிகள் ஒத்துழைப்பு தருமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment