• திமிரி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு.
· திமிரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள GOOD PRIVATE LIMITED COMPANY-யில் பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அவசர உதவி எண் 1091, சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 400 பெண்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment