• வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் முகரம்.
· வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் முகரத்தை முன்னிட்டு மார்பில் அடித்தும் கத்தி போட்டும் ரத்தம் சொட்ட சொட்ட முகரத்தை அனுசரித்தனர்.
வேலூர் மாவட்டம், வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் கர்பலாவில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் குடும்பத்துடன் கொல்லப்பட்ட தினமான இன்று முகரத்தை அனுசரித்து துக்க பாடல்களை பாடிய வண்ணம் கருப்பு உடை அணிந்து மார்பில் அடித்தும் மார்பில் கத்தி போட்டும் ரத்தம் சொட்ட சொட்ட சோக பாடல்களை பாடிய வண்ணம் ஊர்வலமாக சென்று முகரத்தை அனுசரித்தனர்.
இதில் திரளான ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பங்கேற்று பிடிசி சாலை, காந்தி சாலை வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஷியா பிரிவு மசூதி அருகே வந்து ஊர்வலம் நிறைவடைந்தது. இதனை திரளான மக்கள் மாடிகளில் உயரமான இடங்களில் நின்று பார்வையிட்டனர்.

Comments
Post a Comment