• அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி.
· அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 159 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர், தலைவர்/ வருவாய் தீர்வாய அலுவலர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 159 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி தொடங்கி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது.
அணைக்கட்டு வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முதல் நாளன்று அணைக்கட்டு, அப்புகல், ஊனைவாணியம்பாடி, கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், கரடிகுடி, தேவிசெட்டிக்குப்பம், கருங்காலி, ஊனை, வல்லண்டரமாம், கெங்கநல்லூர் ஆகிய 13 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் மனுக்கள் பெற்று, வருவாய் ஆவண பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
இந்த ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத்திட்டங்களின்கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்டப்பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான 159 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்/வருவாய் தீர்வாய அலுவலர் அவர்களால் பெறப்பட்டது.
முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் நில அளவைக்கு பயன்படுத்தப்படும் கண்ட்டர் சங்கிலிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.
தொடர்ந்து மனு அளித்த இரண்டு மாற்றுத்திறனாளிகளின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து தலா ரூ.9,000/- மதிப்பிலான இரு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாறன், துணைஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாற்றுதிறனாளிகள் நலத்துறை நல அலுவலர் பாபு, வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment