• சிறை கைதிகளின் மறுவாழ்விற்காக அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

·         சிறை கைதிகளின் மறுவாழ்விற்காக அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். 

·         சிறையிலிருந்து விடுதலையானவர்கள் மீண்டும் சமுதாயத்தில் மறுவாழ்வு வாழ பணியாற்றுங்கள் - வேலூர் சரக சிறை துறை தலைவர் சண்முகசுந்தரம் சிறை அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பேச்சு.

            வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் 9-வது பேட்ஜ் சிறை அதிகாரிகளுக்கான மூன்று மாதங்கள் பயிற்சி நிறைவடைந்தது. இதன் பட்டமளிப்பு விழாவானது சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ப்யூலா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

     இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக சிறை துறை தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இதில் சிறப்பாக பயிற்சி முடித்த மீயூனாகட்டூன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர்களுக்கு பதக்கங்களும் சான்றுகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

            இவ்விழாவில் பட்டங்களை வழங்கி வேலூர் சரக சிறைத்துறை தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில்,

   குற்றம் செய்ததால்தான் அவர்களுக்கு சிறை தண்டனையே வழங்கப்பட்டுள்ளது என்பதனை அதிகாரிகள் உணர வேண்டும். சிறை கைதிகளின் குற்ற ஆவணங்களையும் குற்றத்தை கருத்தில் கொண்டு கைதிகளை எப்போது எடை போட வேண்டாம். குற்ற ஆவணங்களை கைதிகளின் வாழ்க்கையாக பாருங்கள்.  அவர்கள் கோபத்தில் கூடம் குற்றம் செய்திருக்கலாம். ஆகையால் அவர்கள் மனிதநேயத்துடன் நடத்துங்கள்.

    அவர்கள் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் மீண்டும் சமுதாயத்தில் இணைந்து வாழ நீங்கள் வழிவகை செய்ய வேண்டும். சிறை கைதிகள் மனம் மாறினால் அதுவே நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் தண்டனையாகும். மேலும் கைதிகள் மன புண்படுத்தாமல் மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். பணியின்போது அதுவே நான் உங்களுக்கு வைக்கும் கோரிக்கை என பேசினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.