• வேலூரில் திமுக அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.

·         தமிழக மனித வள  மேம்பாடு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் வேலூரில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம். 

·         ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு கைது செய்து  காவலர் நலவாழ்வு  மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு.

         (ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில்) பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போன்ற தமிழக வெற்றி கழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரின் வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது. அது தொடர்ந்து சர்ச்சையாக இருந்த நிலையில், குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையைப் பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

         இந்த நிலையில் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளின் சார்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தது. இதனை தொடர்ந்து திமுக தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்து அவரை உடனடியாக பதவி விலக வேண்டுமென தெரிவித்திருந்தது. மேலும் அமைச்சரை கண்டித்து மாணவர் அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி அறிவித்திருந்தது.

     இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடந்த மாநகர திமுக அலுவலகத்திலிருந்து மாணவரணி செயலாளர் தேவராஜ் தலைமையில் சுகுமார், முகமதுசகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்பாட்டம் செய்தனர்.

          தமிழக வெற்றி கழக அரசையும் அமைச்சரையும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

     தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக-வினரை கைது செய்து காவலர் நல்வாழ்வு மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.