• இராணிப்பேட்டை காவல் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு.
· இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (Anti–Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் குமார், மற்றும் வெங்கடகிருஷ்ணன், காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் ஆயுதப்படை தலைமையகத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Comments
Post a Comment