• வேலூர் மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு.
· வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறந்து ஆட்சியர் ஆய்வு.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் கிடங்கு உள்ளது தற்போது இக்கிடங்கில் வேலூர், அனைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் எண்ணப்பட்டு இக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்களும் இங்கு தான் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் முன்னிலையில் அனைத்து கட்சியினர் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பகுஜன்சமாஜ் கட்சி, உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட கிடங்குகளை திறந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Comments
Post a Comment