• பள்ளி வாசல் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் மானியம்

·        வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு  இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து  ரூ.50,000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.

                இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% அல்லது வாகனத்தின் விலையில் ரூ.50,000/- இதில் எது குறைவோ அத்தொகை மான்யமாக வழங்கப்படும்.   

                அதன்படி, இத்திட்டத்தின்கீழ் தகுதியான உலமா பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:

1.                 மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.

2.             தங்கள் சொந்த நிதியில் இருசக்கர வாகனம் வாங்க முழு தொகையும் செலுத்தி இருப்பின் விண்ணப்பதாரருக்கு நேரடியாக ECS முறையில் மானியத் தொகை ஒப்பளிக்கப்படும்.

3.             மானியத்தொகை பெற்ற பின்னர் இருசக்கர வாகனம் வாங்கும் நேர்வில், மானியத் தொகை நேரடியாக சம்மந்தப்பட்ட விற்பனையாளரின் வங்கி கணக்கிற்கு  ECS மூலம் அளிக்கப்படும்.

4.             உலமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

5.             மனுதாரர் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பள்ளிவாசலில் பணியாற்றியிருக்க வேண்டும்.

6.             தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.இதனை உறுதி செய்ய Nativity Certificate சமர்ப்பிக்க வேண்டும்.

7.              வயது 18-லிருந்து 60 வயது உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

8.             விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள்:

                இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனம் புதிய தொழிற்நுட்பத்துடன் கூடிய Gearless / Auto Gear கூடிய எஞ்சின் கொள்ளளவு 125CC சக்திக்கு மிகாமலும், வாகன விதிமுறைச்சட்டம் 1998-ன்படியும் பதிவு செய்திருக்க வேண்டும்.  மேலும், வாகனம் 01.01.2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

                இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம் பெற்ற பயனாளி வாகனத்தை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை விற்கவோ, வேறொரு நபருக்கு மாற்றவோ உரிமை கிடையாது.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

1.

ஆதார் அட்டை

2

வயது சான்றிதழ்

3.

புகைப்படம்

4.

இருப்பிடச் சான்று (Nativity Certificate)

5.

ஓட்டுநர் உரிமம்/(Driving License)

6.

வங்கிக்கணக்கு எண் (ம) IFSC குறியீடுடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நல்

7.

சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று சரக வக்ஃபு வாரிய கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

8.

வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

9.

உலமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலமா பணியாளர்கள் மான்ய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், வேலூர் என்ற முகவரியில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்   பி.எஸ்.லீலாஅலக்ஸ்,  தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.