• தாட்கோ ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி பயிற்சி.
- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல்(Certificate in Textile Painting, Dyeing & Printing Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு நான்கு மாதங்கள் மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளதால் தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியினை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்
மேற்கண்ட பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ், தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment