• தாட்கோ CAD, CAM பயிற்சிகள்.
· தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது - இப்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
இளைஞர்களுக்கு Computer-Aided Design(CAD), Computer-Aided Manufacturing
(CAM) Course and Industrial Automation (Course) போன்ற பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங்
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும்,மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மேலும் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.25000/- முதல் ரூ.40,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்..
மேற்கண்ட பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment