• வேலூர் SSC CGL தேர்வுக்கு பயிற்சி.

  • வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள SSC CGL (Combined Graduate Level)  தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையால் நடத்தப்படும்  கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்  அதிக அளவில் கலந்து கொண்டு  தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு  வேலையை பெற்று பயனடையுமாறு  மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சி துறையால் வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNSURB, TRB, SSC, RRB  மற்றும் IBPS போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

 

தற்போது,  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள SSC CGL (Combined Graduate Level) தேர்விற்கு 12,256 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 21.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித்தகுதி அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எனவே, SSC CGL (Combined Graduate Level) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக சிறந்த பயிற்றுநர்களைக்   கொண்டு   10.06.2026 முதல் நடத்தப்படவிருக்கிறது

 

அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.  மேலும், தகவல்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண் 0416 2290042 மற்றும் 9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவிலான கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு  வேலையை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ், தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.