• வேலூர் “START RUN, STOP DRUGS” - Anti-Drug Run-2026 விழிப்புணர்வு மாரத்தான்.


 ·        வேலூர் மாவட்டத்தில் “START RUN, STOP DRUGS” - Anti-Drug Run-2026 விழிப்புணர்வு  மாரத்தான் 26.06.2026 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் “START RUN, STOP DRUGS” - Anti-Drug Run-2026 என்கிற தலைப்பில் 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை 26.06.2026 அன்று நடத்த அறிவுறுத்தியுள்ளார்.  

 

நாள்

இடம்

நேரம்

26.06.2026

டவுன் ஹால் பழைய பேருந்து முதல் பாகாயம் சிஎம்சி விளையாட்டு அரங்கம் வரை

காலை 6.30 மணிக்கு

 ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS Anti-Drug Run 2026  நடத்திட வழிமுறைகள்:-

இந்த விழிப்புணர்வு ஒட்டத்தில் 14 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்களது பெற்றோர்களுடனும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவோ அல்லது பெற்றோருடனோ கலந்து கொள்ளலாம் எனவும், கட்டாயம் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் தான் உள்ளனர் என்கிற உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து கையொப்பம்  இட  வேண்டும்.

 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள், அரசு அலுவலர்கள், NCC, NSS, Scouts and Guides மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை ஆலோசனையுடன் குறைந்தது 5 கிலோ மீட்டர் தூரம் நன்கு திட்டமிடப்பட்டு பாதுகாப்பான வழித்தடங்களில் நடத்திடவும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் T-Shirts  வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

        இந்த ஒட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ட்டம் நடைபெறும் வழித்தடங்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ட்டம் முடியும் இடங்களிலும் குடிநீர், சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முதலுதவி குழு வாகனத்தில் (Ambulance) தயார் நிலையில் இருக்கவும், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தும் முறையாக நடத்திட அனைத்து விதமான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

                மேலும்   விவரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு மற்றும்   இளைஞர் நலன் அலுவலர் அவர்களை என்ற 7401703483 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேலூர்  மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.