• சிறை கைதிகளுக்கு நல்ல உணவை அளிக்க வேண்டும்.

·         சிறைகளில் நீதிபதிகள் ஆய்வின்போது உணவு சரியில்லை என சிறை கைதிகள் புகார். 

·         சிறை கைதிகளுக்கு நல்ல உணவை அளிக்க வேண்டும். 

·         சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி தெலுங்கானா சிறை துறை .ஜி. முரளிபாபு பேச்சு.

        வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் 35-வது பட்டமளிப்பு விழா சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.

     இதில் தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறை துறை அதிகாரிகள் பயிற்சிகளை முடித்து பட்டங்களை பெற்றனர். அவர்களுக்கு தெலுங்கானா சிறை துறை .ஜி முரளிபாபு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் திரளான சிறை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     ஆல் ரவுண்டர் விருதை அதிகாரி துரிசெட்டி விஜயகுமாரும்,  சிறந்த வெளிப்புற பயிற்சிகளுக்கான விருதை சரவணனும் பெற்றனர். இதில் அதிகாரிகளுக்கு நீச்சல், யோகா, உயிர் காக்கும் அவரச உதவி முறைகள் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல பயிற்சிகளை பெற்று பயிற்சியை நிறைவு செய்தனர்.

            இவ்விழாவில் தெலுங்கானா சிறை துறை ஐ.ஜி. முரளிபாபு,  உங்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. உங்களை நீங்களே கட்டமைத்து கொள்ள வேண்டும். ஒழுக்கம் காலந்தவறாமை, போன்றவைகள் இருக்க வேண்டும்.

            சீருடை அணிந்து பணியாற்றும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ வேண்டும். மேலும் யாராவது நீதிபதிகள் சிறையில் ஆய்வு செய்தால் சிறைவாசிகள் உணவு சரியில்லை என புகார் அளிப்பார்கள். அவ்வாறு புகார் அளிக்க இடம் அளிக்காமல் நீங்கள் நல்ல உணவை அவர்களுக்கு அளிக்க வேண்டும். பிரச்சணைகளை நல்ல முறையில் கையாள வேண்டும்  என பேசினார்.

 



Comments