• வேலூர் மாநகராட்சி காட்பாடி ஊராட்சி ஒன்றிய பணிகள் ஆய்வு.

·        வேலூர் மாநகராட்சி மற்றும் காட்பாடி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டபணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி மற்றும் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பூங்கா, வீட்டு குடிநீர் இணைப்பு, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் கோட்டை பெரியார் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு  செய்தார். பூங்காவில் ஒளிப்படம் திரையிடும் அறையை ஆய்வு செய்தார். மேலும், பூங்காவை தூய்மையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, காட்பாடி வட்டம், வார்டு எண்.6, செல்வம் நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 24 X 7 குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு  செய்தார். இந்த ஆய்வின்போது வீட்டு குடிநீர் இணைப்பு (HSC) கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கணக்கெடுப்பு பணிகளை துரிதப்படுத்தி, நடப்பு வாரத்திற்குள் முழுமையாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்கள், PMC குழு மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து காட்பாடி வட்டம், சேர்க்காடு ஊராட்சியில் உள்ள  திருவள்ளூவர் பல்கலைகழகத்தில் மாணவர்களின் பருவதேர்வு  விடைத்தாள்களை இணையவழி டிஜிட்டல் மதிப்பீடு செய்யும் ஆய்வகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறநோயாளிகள் வருகைப் பதிவேடு, சிகிச்சை முறைகள், ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், வளாகத்தில் ரூ.78 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம்பள்ளி ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது  மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்து, அனைவரும் 100 தேர்ச்சி பெற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், உணவுப்பொருள் இருப்பு அறையில் உணவுப் பொருட்களின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி கழிவறைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார். மழைக்காலம் தொடங்கவுள்ளதால் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து காட்பாடி ஊராட்சி ஒன்றியம், விண்ணம்பள்ளி ஊராட்சி, கொடுக்கந்தாங்கல் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது  குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை  ஆய்வு செய்தார். மேலும், குழந்தைகளின் எண்ணிக்கை, ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், திருவள்ளூவர் பல்கலைகழக பதிவாளர் முனைவர் ஜே.செந்தில்குமார் வேல்முருகன், வளாக இயக்குநர் முனைவர் அ.ராஜசேகர், செயல் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆர்.பாபு ஜனார்த்தனன், காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments