• வேலூர் மாவட்டத்தில் “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்"

வேலூர் மாவட்டத்தில் “ மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" - மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ , மாணவிகளுடன் கலந்துரையாடினார் . வேலூர் மாவட்டத்தில் “ மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்" என்ற நிகழ்வின் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி விருபாட்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார் . இந் நிகழ்வில் விருபாட்சிபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 164 மாணவ , மாணவி கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சி தலைவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உயர்கல்வி மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த ஐயங்களுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கலந்துரையாடலின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததாவது. 10, 11 மற்றும் 12-...