• ஜுனியர் ரெட்கிராஸ்அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநிலக்கூட்டம்
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநிலக் கூட்டம் இந்தியன் ரெட்கிராஸ் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பின் தற்காலிக குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் முனைவர் எம் . ஜெயசந்திரன் தலைமை தாங்கினார் . குழுஉறுப்பினர்கள் தாமஸ் வி . ஜான் , வழக்கறிஞர் சங்கரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஜுனியர் ரெட்கிராஸ் குழு பொறுப்பாளர் உறுப்பினர் கார்த்திக் திருநாராயணன் மாநில செயல்பாடுகள் குறித்து பேசினார் . வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ . நா . ஜனார்த்தனன் , திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சி . சுப்பிரமணி , இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் கா . வே . கிருபானந்தம் , செய்யாறு - செல்வத்திருமால் , சேலம் - பிரபாகரன் நெல்லை - சொக்கலிங்கம் , விழுப்புரம் பாபு செல்லதுரை செங்கல்பட்டு கீதாகுமாரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்து அமைப்பாளர்கள் பேசினர் . ...