• ஜுனியர் ரெட்கிராஸ்அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநிலக்கூட்டம்

 

     ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநிலக் கூட்டம் இந்தியன் ரெட்கிராஸ் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பின் தற்காலிக குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் முனைவர் எம்.ஜெயசந்திரன் தலைமை தாங்கினார். 

          குழுஉறுப்பினர்கள் தாமஸ் வி.ஜான், வழக்கறிஞர் சங்கரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஜுனியர் ரெட்கிராஸ் குழு பொறுப்பாளர் உறுப்பினர் கார்த்திக் திருநாராயணன் மாநில செயல்பாடுகள் குறித்து பேசினார்.  வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சி.சுப்பிரமணி, இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் கா.வே.கிருபானந்தம், செய்யாறு-செல்வத்திருமால், சேலம்-பிரபாகரன் நெல்லை-சொக்கலிங்கம், விழுப்புரம் பாபு செல்லதுரை செங்கல்பட்டு கீதாகுமாரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்து அமைப்பாளர்கள் பேசினர்.

      அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக், மத்திய கல்வி வாரிய பள்ளிகள், இந்திய கல்வி வாரிய உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பினை ஏற்படுத்தி செயல்படுத்துவது, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாளில் ஜுனியர் ரெட்கிராஸ் செல்பாடுகளை நடைமுறை படுத்திட வேண்டும்.

      முதலுதவி, பேரிடர் மேலாண்மை, குருதிக்கொடை ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களில் ஜுனியர்களுக்கு பயிற்சி அளிப்பது, மாநில அளவில் ஜுனியர்கள் மற்றும் ஆலோசகர்கள் தேர்வு செய்து ஆளுநர் அவர்களின் விருது வழங்கி கௌரவிக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட 17 தலைப்புகிளில் விவாதம் நடைபெற்றது.

                 முடிவில் மாநில அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வினிதா நன்றி கூறினார்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.