• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

·         25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள். 

·         நட்பு, நினைவுகள், கல்வி, பெண்மையின் முன்னேற்றம் - மன நெகிழ்ச்சியான வெள்ளி விழா கொண்டாட்டங்கள்.

     தஞ்சாவூர் மாவட்டம், பெரியார் மணியம்மை தொழில்நுட்பக் கல்லூரி மகளிர் நிறுவனத்தின் 1997–2001-ஆம் ஆண்டு முன்னாள் மாணவியர்கள் இணைந்து, தங்கள் கல்லூரிப் பயணத்தின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் வெள்ளி விழாவை கொண்டாடினர்.

     இது வெறும் முன்னாள் மாணவியர் சந்திப்பு அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய  அழகிய பயணத்தையும், நட்பையும், எண்ணற்ற இனிய நினைவுகளையும், தங்களுக்குள் விதைக்கப்பட்ட கனவுகளையும் கொண்டாடிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

        மகளிர் கல்லூரியாக செயல்பட்டு, பெண்களுக்கு தரமான கல்வியை மட்டுமின்றி, தன்னம்பிக்கை, துணிச்சல், சுயநம்பிக்கை மற்றும் வாழ்க்கையில் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கும் ஆற்றலையும் வழங்கிய அறிவாலயம்தான் பெரியார் மணியம்மை கல்லூரி.

   அன்றைய காலகட்டத்தில், பல இளம் பெண்களின் கனவுகளுக்கு சிறகளித்து, “பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை  உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.

     தலைவர் கி.வீரமணி-யின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும், கல்வி, சமூகப் பொறுப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது. கல்லூரியில்  பெற்ற கல்வியும், அனுபவங்களும், நற்பண்புகளும் இன்றும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிகளாக உள்ளன.

            25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நீண்ட காலத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களிலும், வெவ்வேறு துறைகளிலும், வெவ்வேறு பொறுப்புகளிலும் பயணிக்கின்றனர்சிலர் சிறந்த பணிகளில் உயர்ந்திருக்கின்றனர்; சிலர் குடும்ப வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றனர்; பலர் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்றனர். ஆனால் காலம் கடந்தாலும், தூரம் அதிகரித்தாலும்,  கல்லூரி நட்பின் பந்தம் மட்டும் மாறவில்லை.

     குடிசார் பொறியியல் (Civil Engineering), கணினி பொறியியல் (Computer Science Engineering) மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் பொறியியல் (Electronics and Communication Engineering) துறைகளை சேர்ந்த முன்னாள் மாணவியர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து, அவர்களின் கல்லூரி வளாகத்தில் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது.

  ஒரே வகுப்பறையில் அமர்ந்தவர்கள், ஒரே ஆய்வகத்தில் பணியாற்றியவர்கள், ஒன்றாக சிரித்தவர்கள், ஒன்றாக கனவு கண்டவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக சந்தித்ததனர்.

      வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதி வாழ்க்கை, கல்லூரி விழாக்கள், நண்பர்களுடனான சிரிப்புகள், தேர்வு நாட்கள், சிறு சண்டைகள், பகிர்ந்து கொண்ட உணவுகள், எண்ணற்ற இனிய தருணங்கள் என அனைத்தும் அனைவர் மனதிலும்பசுமையான நினைவுகளாக இருந்தன.

     தங்களின் அன்பிற்குரிய ஆசிரியர்களை மீண்டும் சந்தித்து, அவர்களுக்கு  நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.

   இவர்கள் இன்று  எங்கு இருந்தாலும், எத்தனை உயரங்களை அடைந்திருந்தாலும், அந்தப் பயணத்தின் முதல் படிகளில் ஒன்று  இக்கல்லூரியில்தான் தொடங்கியது.

         25 ஆண்டுகளுக்கு முன்பு கனவுகளுடன் இளம் மாணவிகளாக இந்தக் கல்லூரிக்குள் நுழைந்து கல்வியையும் தன்னம்பிக்கையையும் பெற்றுக்கொண்டு துணிச்சலான பெண்களாக வெளியேறி, இன்று, வாழ்க்கையின் பல அனுபவங்களையும், சாதனைகளையும், இனிய நினைவுகளையும் சுமந்து கொண்டு மீண்டும் ஒரே குடும்பமாக இங்கு திரும்பி, இணைந்து கொண்டாடிய இந்த வெள்ளி விழா அவர்களின் நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. எதிர்கால தலைமுறை மாணவியருக்கு அவர்களின் பயணம் ஒரு உத்வேகமாக அமைந்தது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.