Posts

• ரங்காபுரம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.

Image
  ·          வேலூர் மாநகரில், ரங்காபுர ம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.   ·          புதிய நீதிக்கட்சிதலைவர் ஏசி சண்முகம் பிறந்த நாள் முன்னிட்டு ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் - பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.             “ மருத்துவர்களை தேடி மக்களல்ல மக்களை தேடி மருத்துவர்கள்”   புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ . சி . எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனர் ஏ . சி . சண்முகம் தொடங்கி வைத்தார்                 வேலூர் மாநகரில், ரங்காபுர ம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாள் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ . சி . சண்முகம் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச உடற்பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமானது நடைபெற்றது . இதனை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ . சி . எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனருமான ஏ . சி . சண்முகம் துவங்கி வைத்தார் . கண் பரிசோதன

• வேலூரில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் - நடிகர் பிரபு

Image
·          வேலூரில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் - நடிகர் பிரபு திறந்து வைத்தார் - நடிகை ரெஜினா பங்கேற்பு.         வேலூர், அண்ணா சாலையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் செயல்பட்டு வந்தது. இந்த கடையானது புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் பிரபு கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைகடையை திறந்து வைத்தார்.         இந்த விழாவில் நடிகை ரெஜினா மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் , கல்யாண் ஜுவல்லர்ஸ் பொது மேலாளர் ஜோபி உள்ளிட்டோரும் திரளான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.         விழாவில் நடிகர் பிரபு பேசுகையில், தனது தந்தை சிவாஜிகனேசன் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நாடகங்களில் நடித்ததாக கூறியுள்ளார். ஆகவே இம்மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக பேசினார்.  

• எஸ்.ஆர்.எம். - கல்விப் புலங்களில் கவனம்பெற “தமிழில் சிறார் இலக்கியங்கள்”

Image
  ·          எஸ் . ஆர் . எம் . - கல்விப் புலங்களில் கவனம்பெற “ தமிழில் சிறார் இலக்கியங்கள் ” ·          ஆறு நாள் இணைய வழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம். ·          நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றது தனிச்சிறப்பு .         காட்டாங்குளத்தூர், எஸ் . ஆர் . எம் . அறிவியல் மற்றும் கலையியல் புலத் தமிழ்த்துறை “ தமிழில் சிறார் இலக்கியங்கள் ” என்னும் தலைப்பில் ஆறு நாள் இணைய வழியிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கத்தினை ஒருங்கிணைத்து வருகின்றது .                2023 அக்டோபர் 16 -ஆம் தேதி தொடங்கிய இப்பயிலரங்கம் 21 ஆம் தேதி நிறைவு பெற்றது . பெரிதும் கல்விப்புலங்களில் கவனப்படுத்தப்படாத சிறார் இலக்கியங்கள் குறித்து ஆறு நாட்கள் தொடர் நிகழ்வை நடத்தி எஸ் . ஆர் . எம் . தமிழ்த்துறை இத்துறை சார்ந்த சிந்தனையைப் பரவலாக்கம் செய்துள்ளது .           இந்த ஆறுநாள் பயிலரங்கில் 12 பேர் உரை வழங்கிச் சிறப்பிக்கின்றார்கள் . சாகித்திய அகாதமியின் பாலபுரஸ்கார் விருதுபெற்ற பல எழுத்தாளர்களும் , எஸ் . ஆர்

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

Image
 

வேலூரை சேர்ந்த பி.எஸ் எப். வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

Image
  ·          பெங்களூரில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த வேலூரை சேர்ந்த பி . எஸ் எப். வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி .                  வேலூரை சேர்ந்தவர் சுதாகர் (41). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவர் கடந்த 28 - ஆம் தேதி பாதுகாப்பு பணியின்போது விபத்து ஏற்பட்டதில் பலியானார்.       இன்று அவரது உடல் வேலூர் கொண்டு வரப்பட்டு   அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாநகராட்சி எரியூட்டும் தகனமேடை மையத்தில் சுகாதரின் உடல் எரியூட்டப்பட்டது.  

“நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்”

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை வருகின்ற 04. 11. 2023 சனிக்கிழமை அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளதை தொடர்ந்து , வேலூர் மாவட்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்” கோட்டை அருகே உள்ள காந்தி சிலை அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்   தொடங்கி வைக்க உள்ளார்.                 பொதுமக்கள் சுகாதாரமான வாழ்க்கையை வாழ்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தவாறு அரசாணை 105 “நடப்போம் நலம் பெறுவோம்" எனும் திட்டம் நிறைவேற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “ நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின்படி 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி இருக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற   04:11 2023 அன்று துவக்கி வைக்க உள்ளர்கள்             நமது வேலூர் மாவட்டத்திலும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வா