• அகில உலக போதைப்பொருள் எதிர்ப்பு மனித சங்கிலி ஊர்வலம்.
· அகில உலக போதைப்பொருள் எதிர்ப்பு மனித சங்கிலி ஊர்வலம். வேலூர் மாவட்டம், கணியம்பாடி, அடுக்கம்பாறை தலைமை அரசு மருத்துவமனை எதிரில் அகில உலக போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தினம் மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புதுடெல்லி விஷ்வயுவகேந்திரா மற்றும் அகில உலக அளவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முயற்சி எடுத்து வரும் ஸ்பெயின் கூட்டமைப்பு மற்றும் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் இடையஞ்சாத்து நீட் அகாடமி , வி . எஸ் . எஸ். தொழில் கல்லூரி இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் நீட் அகடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் நவக்குமார் அனைவரையும் வரவேற்றார். வெங்கடேஸ்வரா கல்லூரி முதல்வர் டாக்டர் ஞானசேகரன் தலைமை வகித்தார் . சிறப்பு விருந்தினராக கணியம்பாடி ஒன்றிய சேர்மன் திவ்யாகமல்பிரசாத் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். ...