Posts

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் 371   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை த் தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப் பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலை வாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 371 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர...

• வேலூரில் கிரில் அமைக்கும் பணியின்போது இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு.

Image
·          வேலூரில் கிரில் அமைக்கும் பணியின்போது இறந்த வெல்டிங் தொழிலாளிக்கு தமிழ்நாடு வெல்டிங்க் உரிமையாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ . 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது    வேலூர் மாவட்டம் , காகிதப்பட்டறையில் பத்மா ஸ்டீல் ஒர்க்ஸ் உரிமையாளர் முகேஷ் மற்றும் தொழிலாளி சதிஷ்குமார் ஆகியோர் மேல்வல்லம் கிராமத்தில் ஒரு வீட்டில் ஸ்டீல் கிரில் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.   இதனை அறிந்த வெல்டிங் உரிமையாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமையில் இழப்பீட்டு தொகையாக ரூ . 50 ஆயிரத்தை மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி சதிஷ்குமார் குடும்பத்தினரிடம் அளித்து ஆறுதல் கூறினார்கள்.       மேலும் மத்திய மாநில அரசுகள் வெல்டிங் மற்றும் கிரில் ஒர்க்குகளுக்கு பல்வேறு வரிகளை வசூலிக்கிறது. ஆனால் எங்களுக்கு போதிய பணி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து பல மாவட்டங்களில் ...

• வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்பத்திரிக்கை செய்தி.

·         வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் / ஊராட்சிகளின் ஆய்வாளர் பத்திரிக்கை செய்தி .           வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் / ஊராட்சிகளின் ஆய்வாளர் வே . இரா . சுப்புலெட்சுமி வழங்கிடும் பத்திரிக்கை செய்தி .                  பல்ராம்சிங் என்பவரால் மாண்புமிகு உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண் : WP (CIVIL) 324/2020)- ல் , 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை (Manual Scavengers) கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய வருகிறது .       வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின் , மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் . 2013 பிரிவு எண் -11- ன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வ...

• மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங்-குக்கு அஞ்சலி.

Image
  ·          மறைந்த முன்னாள் பாரத பிரதமர்   மன்மோகன்சிங்-குக்கு காங்கிரஸ் திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அஞ்சலி - மௌன ஊர்வலம்.               வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் திருஉருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா , காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹீத் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.       பின்னர் அலங்கரிக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் திருஉருவ படத்தினை வேனில் வைத்து கொண்டு மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் திமுக , மதிமுக , காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். இறுதியாக மீண்டும...

• வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்.

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகையை பெற விரும்பும் பயனாளிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, விபத்து நிவார ண ம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாபுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக 4,26,993 நபர்களும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் 3,00,569 நபர்களும், ஆக மொத்தம் 7,27,561 நபர்கள் உள்ளனர். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கீழ்கண்ட வரைம...