Posts

• சேக்கனூர் ஊராட்சி டி.கே.எம் கல்லூரி மாணவிகளின் தேசிய நாட்டு நல பணி.

Image
  ·          சேக்கனூர் ஊராட்சியில் டி . கே . எம் கல்லூரி மாணவிகளின் தேசிய நாட்டு நல பணி திட்டம்.     ·          இயற்கையை போற்றுவோம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைதலைவர் கே . விஸ்வநாதன் கருத்துரை.       வேலூர் மாவட்டம், டி . கே . எம் (DKM) கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி மாணவிகளின் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக வேலூர் ஒன்றியத்தில் உள்ள சேக்கனூர் ஊராட்சியில் NSS முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள் , NSS முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர் . பல்வேறு கருத்தாளர்கள் வருகை தந்து மாணவிகளுக்கு பல்வேறு விதங்களில் கருத்துரைகள் ஆற்றினர்.       இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைதலைவர் மற்றும் காட்டுப்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே . விஸ்வநாதன் இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில் இந்தியாவின் இயற்கை வளங்கள் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் , இந்தியாவின் ...

• வேலூர் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்.

Image
வேலூர் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 371   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை த் தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 371 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண...

• கொசவன்புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்.

Image
  ·          வேலூர் மாவட்டத்தில் ஜனவரி-2025 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் – வேலூர் மாவட்டம் , கே.வி.குப்பம் வட்டம் , கொசவன்புதூர் கிராமத்தில் 29.01.2025 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் .                       வேலூர் மாவட்டத்தில் ஜனவரி – 2025 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் கே . வி . குப்பம் வட்டம் , பசுமாத்தூர் மதுரா , கொசவன்புதூர் கிராமத்தில் 29.01.2025 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . இம்முகாம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன்கூட்டியே மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய முறையில் விசாரணை செய்து அதன் விவரத்தினை மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் .   தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் நலதிட்ட உதவிகள் சென்றடையும் வகையில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது .   மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் சம்மந்தப்பட்ட துறைய...

• வேலூர் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பொறுப்புகள் ஆலோசனை கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்   நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , தலைமையில் நடைபெற்றது. பயிற்சியின் நோக்கம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அவர்கள் பகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட உரிய திட்டங்களை வகுத்து அறிவுரைகள் வழங்குதல். இப்பயிற்சி முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார அலுவலக கூட்ட அரங்குகளில் ஒரு நாள்   பயிற்சியாக நடைபெறும். இப்பயிற்சியில் அனைத்து ஊராட்சி ஒன்ற...