Posts

• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி.

Image
·          வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் - 1008 சங்காபிஷேகம் - திரளானோர் வழிபாடு.                  வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர், அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி சங்குகளை யாக சாலையில் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து மஹா பூர்னாஹதிக்கு பின்னர் 1008 சங்குகளும் கொண்டு செல்லப்பட்டு ஜலகண்டீஸ்வரருக்கு பால், தயிர் , உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து பின்னர் 1,008 சங்குகளில் உள்ள நீரை கொண்டு சங்காபிஷேகம் செய்து ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

• வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.

Image
·          வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.    ·            நந்தி பகவானுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் – மஹாதீபாராதனை.       வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு   உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.       பின்னர் அலங்காரங்களை செய்து மலர் மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல், மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர். பின்னர்   அகிலாண்டீஸ்வரி, ஜலகண்டீஸ்வரர் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது.  

• வேலூர் மாவட்டத்தில் 28.02.2025 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில் 28.02.2025 அன்று “ வேலூர் , அப்துல்லாபுரம் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு   முகாம்   ·         வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.02.2025 வெள்ளிக்கிழ மை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை வேலூர் “ வேலூர் , அப்துல்லாபுரம் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது . இம்முகாமில் 50– க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர் . இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10– ஆம் வகுப்பு , 12- ஆம்வகுப்பு , தொழிற்பயிற்சி , பட்டப் படிப்பு , பட்டயப் படிப்பு , முதுகலை பட்டப் படிப்பு , தொழில்நுட்ப கல்வி , செவிலியர் , பார்மஸி , பொறியியல் போன்ற பல்வேற...

• பேர்ணாம்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

·         வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகா ம்   26.02.2025 அன்று பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர்.                  வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது . மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window Approach) வட்டார வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது .                 இம்முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UD...

• காட்டுப்புத்தூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.

Image
·          காட்டுப்புத்தூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.    ·          தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சி – ஒளி பிரதிபலிப்பு, ஒளி விலகல் , ஒளி சிதறல் பற்றிய செய்முறை பயிற்சி - வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் கே . விஸ்வநாதன்.       வேலூர்   மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு   தேசிய அறிவியல் நாள் ஓட்டி பள்ளியில் , பெற்றோர்களுக்கும் , தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது .                    இதில் ஒளி பற்றிய மூன்று விஷயங்கள் முதலில் ஒளிபிரதிபலிப்பு, ஒளி விலகல் , ஒளி சிதறல் பற்றிய செய்முறை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. பிறகு சர் . சி . வி . ராமன் வரலாறு மற்றும் ஆசியா கண்டத்திலேயே முதல் நோபல் பரிசு பெற்ற ச...

• வேலூர் அரசு பொருட்காட்சி 28.02.2025 அன்று நிறைவு.

வேலூர்   மாங்காய் மண்டி அருகே நடைபெற்று வரும்   அரசு பொருட்காட்சி 28.02.2025 அன்று நிறைவு பெற உள்ளது - பொதுமக்கள் அதிகளவில் வந்து அரசு பொருட்காட்சியினை கண்டுகளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்   இதுநாள் வரை 22,062-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசு பொருட்காட்சியினை வேலூர் மாங்கா மண்டி அருகில் உள்ள ஸ்ரீகிருபா வர்த்தக மைதானத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 12.01.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பொருட்காட்சி 12.01.2025 முதல் 28.02.2025 வரை நடைபெறும் இப்பொருட்காட்சியில் நீர்வளத் துறை, சுற்றுலாத் துறை, வேளாண்மைத் துறை, வேலூர் மாநகராட்சி, காவல் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, மகளிர் திட்டம், நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாசுக்கட்டுபாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பள்ளிக்கல்வித் துறை, வனத்துறை, மீன்வளத் துறை, பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை,   போக்குவரத் து...

• வேலூரில் விதைகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகள் கண்காட்சி திருவிழா

Image
·          வேலூரில் விதைகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகள் கண்காட்சி திருவிழா - ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.           வேலூர் மாவட்டம் , வேலூர், வெங்கடேஸ்வரா பள்ளியில் மரபு காய்கறிகள் மற்றும் விதைகள் சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில்      கண்காட்சி மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் தமிழகம் முழுவதுமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.       இயற்கை விவசாயத்தை அதிகரிக்கவும், இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம், விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி நடைபெற்றது.       இதில் பாரம்பரிய அரிசிகள், நெல் ரகங்கள் , பல்வேறு வகையான கிழங்குகள், நூற்றுக்கணக்கான தக்காளி, பூசனிக்காய், கத்தரிக்காய், மிளகாய், வெண்டை, சுரக்காய், பீர்கங்காய் ஆகியவைகள் மற்றும் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, குடவாழை, ரத்தசாளி, கொத்தமல்லி , த...