• வேலூர் மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

· வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்க ளுடனான ஆலோசனைக் கூட்டம். வேலூர் , கணியம்பாடி , காட்பாடி, அணைக்கட்டு, கீ.வ.குப்பம், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்க ளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சி த் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின் விளக்கு, சாலை வசதிகள் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளில் DBC பணியாளர்களை கொண்டு தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நிர்த்தேக்க தொட்டியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குளோரினேஷன் செய்வதை ஊராட்சி செயலர் கண்காணிக்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஒதுக்கீட...