• வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள்.

· வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஏலகிரி அரங்கத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 அன்றைய சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்களின் நலனுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி முன்னாள் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும் சுயதொழில் தொடங்கிடவும் வங்கிகள் மூலம் ஒரு கோடி வரை வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30- விழுக்காடு மூலதன ம...