Posts

• வேலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.

·         வேலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். வேலூர் மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் 2024-2025 குருவை மற்றும் சம்பா பருவங்களில் தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று கீழ்க்கண்ட 10 கிராமங்களில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஆவணங்கள் பட்டா நகல் மற்றும் கணினி சிட்டா நகல் (10/1) கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று பெற்று e-DPC மென்பொருள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலைய பணியாளர்கள் பதிவு செய்து விவசாயிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் கைரேகை பதிவுடன் (Bio Metric) நெல்லை விற்பனை செய்துள்ளார்கள் .                 வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குருவை பருவத்தில் 36.440 மெ . டன் மற்றும் சம்பா பருவத்தில் 3001.160 மெ . டன் ஆக மொத்தம் 3037.600 மெ . டன் நெ...

• திருநங்கைகள் அனைவருக்கும் கல்வி கட்டணம் அரசே ஏற்கும்.

·         திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம் அரசே ஏற்கும் .                 வேலூர் மாவட்டத்தில் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி   பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம் , விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங்களையும் ” தமிழ்நாடு அரசே ஏற்கும் ” என அறிவிப்பு வெளிவந்துள்ளது .                  திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும் , உயர்கல்வி பயிலும்போது அவர்களும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைய ஏதுவாக இத்திட்டங்களில் பயன் பெறுவதற்கான தகுதி வரம்புகளில்   திருநங்கை , திருநம்பி , இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் தளர்வு ...

• மானியத் தொகையில் மாவு அரைக்கும் இயந்திரங்கள்.

·         மானியத் தொகையி ல் மாவு அரைக்கும் இயந்திரங்கள்.             வேலூர் மாவட்டத்தில் வாழும் கைம்பெண்கள் , ஆதரவற்றோர் , கணவனால் கைவிடப்பட்டோர் ( ம ) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் , பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகபடுத்தியுள்ளது .            இத்திட்டம் 2025-2026 ம் நிதியாண்டிற்காக   வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள   மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ .10,000/-   அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ .5000/- மானியத் தொகையாக வழங்கப்படும் . இத்திட்டத்தில் கைம்பெண்கள் , கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . விண்ணப்பிக்க தேவையான சான்றுகள் :   ...

• வேலூர் மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

Image
  ·         வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ·         02.07.2025 முதல் 22.07.2025 வரை   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.                   தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் (NADCP) ஏழாம் கால் மற்றும் வாய்   நோய் ( கோமாரி நோய் ) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.07.2025 முதல் 22.07.2025   வரை நடைபெறவுள்ளது . கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது .   மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல் , மலட்டுத் தன்மை , கருச்சிதைவு , கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன .   பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும் . பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு , குறு விவசாயிகளாக இருப்பதால் கால...

• வேலூர் கம்பன் கழகம் கண்ணதாசன் பிறந்த நாள் விழா.

Image
 ·          மொழி பிரச்சனை பற்றியும் கண்ணதாசன் அன்றைக்கே எழுதியுள்ளார் - விஐடி வேந்தர் ஜி விஸ்வநாதன் பேச்சு :       வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது . கம்பன் கழக தலைவர் கோ . வி செல்வம் தலைமையில் பெற்ற இவ்விழாவில் , பல்வேறு கவிஞர்கள் எழுத்தாளர்கள் , தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர் .                 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வேலூர் விஐடி பல்கலை கழக வேந்தர் ஜி . விஸ்வநாதன் , திரைப்படத் துறை கவிதைகளில் இன்னும் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 25 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . திரைப்படங்களுக்கு எழுதி இருக்கிறார் . தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார் . அவருடைய படங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் . கவிதை நூல்கள் வந்திருக்கின்றன . காப்பியங்கள் 10 எழுதப்பட்டிருக்கின்றன. சிற்றிலக்கியங்கள் ஒன்பது வந்திருக்கின்றன . கவிதை நாடகமாக...

• ஜுன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
 ·         ஜுன்   மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்   - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்   நடைபெற்றது .                 வேலூர் மாவட்டத்தில் ஜுன் 2025-ஆம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கு ஜீலை 02 முதல் 22 வரையில் கோமாரி தடுப்பூசி செலுத்த உள்ளதால் , விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்தப்பட்டது .       வேளாண்மை துறை மூலம் நடப்பு நிதியாண்டில் வேளாண்மை துறை திட்டங்கள் விவரங்கள் அடங்கிய கையேடு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் - ல் வழங்கப்பட்டது .        ...