• வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை.
வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தொடர்பாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகள் அல்லது கோழிகளில் ஏதேனும் இறப்புகள் ஏற்பட்டால் பொது மக்கள் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையிலோ அல்லது 0416-2214918 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். பறவைக் காய்ச்சல் எனும் AH5N1 இன்ஃபுளுயன்சாஎன்பது பறவைகளுக்கு வரும் நோய் ஆகும் . பறவை காய்ச்சல் நோய் என்பது காட்டில் வசிக்கும் பறவைக ளி டியே பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும் . இந்நோய் வளர்ப்பு கோழிகள் மற்றும் பிற பறவை மற்றும் விலங்கு இனங்களை பாதிக்க க்கூ டும் . இந்த பறவை காய்ச்சல் வைரஸ்களால் மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்க...