Posts

• வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் முன்னெச்சரிக்கை.

வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தொடர்பாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21   தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  காட்டுப் பறவைகள் அல்லது கோழிகளில் ஏதேனும் இறப்புகள் ஏற்பட்டால் பொது மக்கள்   உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையிலோ அல்லது   0416-2214918 என்ற தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர்   தெரிவித்துள்ளார்.              பறவைக் காய்ச்சல் எனும் AH5N1 இன்ஃபுளுயன்சாஎன்பது பறவைகளுக்கு வரும் நோய் ஆகும் . பறவை காய்ச்சல் நோய் என்பது காட்டில் வசிக்கும் பறவைக ளி டியே பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும் . இந்நோய் வளர்ப்பு கோழிகள் மற்றும் பிற பறவை மற்றும் விலங்கு இனங்களை பாதிக்க க்கூ டும் . இந்த பறவை காய்ச்சல் வைரஸ்களால் மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை பறவை காய்ச்சல் தொடர்பான எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்க...

• வேலூர் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி.

Image
 ·         வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ,   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர் ,   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ , மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட   வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ,   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ , மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி , டி.கே.எம் மகளிர் கலை கல்லூரியில் தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ,   பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும்   பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ...

• குடியாத்தம் மோர்தானா அணை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு

Image
 ·         குடியாத்தம் மோர்தானா அணை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு - வெள்ளி விழா நினைவு தூணை நீர்வள துறை அமைச்சர் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் , குடியாத்தம் வட்டம் , மோர்தானா அணை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி , வெள்ளி விழா நினைவுத்தூணை நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் அணைதளத்தில் திறந்து வைத்தார். மோர்தானா அணை : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை 02.09.2000 - ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் - ல் திறந்து வைக்கப்பட்டது. கவுண்டன்ய மகாநதி ஆந்திர மாநிலம் , புங்கனூரில் உற்பத்தியாகி 25 கிலோ மீட்டர் தூரமும் , தமிழகத்தில் 25 கிலோமீட்டர் தூரமும் என மொத்தம் 50 கிலோ மீட்டர் பயணித்து ஐதர்புரம் கிராமத்தின் அருகே பாலாற்றில் கலக்கின்றது. மோர்தானா அணையானது 475 மீட்டர் நீளத்திலும் ,   11.50 மீட்டர் உயரத்தில் 261.360 மில்லியன் கன அடி கொள்ளளவில் நீரை தேக்கி இதன் மூலம் 8367 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது....

• ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு.

·         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த   குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II   மற்றும் II A-முதன்மை தேர்வு   வேலூர் மாவட்டத்தில்   08.02.2026 மற்றும் 22.02.2026   ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது -   மாவட்ட ஆட்சி தலைவர்.  வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II ( தொகுதி - II மற்றும் தொகுதி II A   பணிகள் ) பதவிகளுக்கான குருப் 2 மற்றும் 2 A தேர்வானது வருகிற 08.02.2026 அன்று முற்பகல் 09.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் OMR Method ) பிற்பகல் 02.30 மணி முதல் 05.30 மணி வரையிலும் ( Descriptive Method ) நடக்கவிருக்கிறது . வேலுார் மாவட்டத்திலுள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் 171 தேர்வர்களும் , பிற்பகல் 176 தேர்வர்களும் இத்தேர்வினை எழுதுகின்றனர் . மேலும் குருப் 2– விற்கான தேர்வு 22.02.2026- அன்று முற்பகல் 09.30 மணி முதல் 12.30 மணி வரையில் ( Descriptive Method ) நடைபெறுகிறது . வேலுார் மாவட்டத்திலுள்ள அரச...