Posts

• வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.

Image
·          வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வருவாய் துறை ஊழியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு    ·          இரு சக்கர வாகனத்தை தனித்தனியாக பிரித்து போட்டு ஆய்வு - பாம்பு தப்பி ஓட்டம்.         வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் சதிஷ்குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றிருந்தார்.       இந்த நிலையில் அந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து வாகன உரிமையாளர் சதிஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர்.       இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு இரு சக்கர வாகனத்தில் பாம்பு புகுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய்ணைப்பு துறையினர் பாம்பை தேடினர். பின்னர் இரு சக்கர வாகன மெக்கானிக்கை அழைத்து வை...

• காட்பாடியில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஆர்பாட்டம்.

Image
 ·          காட்பாடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம் .              வேலூர் மாவட்டம் , காட்பாடி, கல்புதூரில் உள்ள காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் , பாட்டாளி மக்கள் கட்சி , பாரதிய ஜனதா , புரட்சி பாரதம் , அமமுக , ஐ . ஜே.கே. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.     இதில் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் , பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி , பாஜக மாவட்ட தலைவர் தசரதன் , கூட்டணியினர் பங்கேற்று நூறு நாள் வேலைவாய்ப்பு சரியாக வழங்காத திமுக அரசை கண்டித்தும், பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக-வை கண்டித்தும் திரளானோர்   ஆர்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.  

• வேலூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்.

Image
 ·          வேலூரில் திமுக கூட்டணி கட்சிக ள் ஆர்பாட்டம்.              வேலூர் மாவட்டம் , வேலூர், அண்ணாசாலையில் தலைமை தபால் நிலையம் அருகில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்பாட்டம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.     மத்திய அரசு தமிழகத்திற்கு பட்ஜெட்டில் போதுமான நிதியை ஒதுக்கவில்லை எனவும், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பங்கீட்டை வழங்கவில்லை எனவும், அமெரிக்காவின் விளை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதித்த மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுக-வை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.     இதில் அவைதலைவர் முகமது சகி , கூட்டணி கட்சிகள் சுந்தர் விஜி , டீக்காராமன் , லதா , சங்கரி , இக்பால் உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.       இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ...

• வேலூரில் அனைத்து துறை ஊழியர் சங்கங்கள் ஆர்பாட்டம் .

Image
·          வேலூரில் அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று   ஆர்பாட்டம் .              வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் அரசு ஊழியர் சங்க துணைதலைவர் வேலு   தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தீனதயாளன் , சேகர் , ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.              இதில்   அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று என் . பி . எஸ் . / யு.பி.எஸ். திட்டங்கள் ரத்து நிதி மேலாளர்களிடம் டெபாசிட் செய்த தொகையை மாநில அரசுகளுக்கு திருப்பி தந்திட, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்கிட, ஒப்பந்த / புற ஆதார / தினசரி வேலைவாய்ப்பை நிறுத்திட,              மாநில அரசுத் துறை...