• திங்கள் தின குறை தீர்வு முகாம்கள் நடைபெறாது.
· தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை திங்கள் தின குறை தீர்வு நாள் (GDP) முகாம்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடைபெறாது - வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 23.04. 2026 ( வியாழக்கிழமை ) அன்று நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது . எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நடத்தை விதிகள் 15.03.2026 முதல் அமலுக்கு வருவதால் , வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மற்றும் மனு நீதி நாள் முகாம்கள் , இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் , மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மற்றும் ஏனைய அ...