• வேலூர் வேளாண் அடுக்கக திட்டம் - 58,696 விவசாயிகள் பதிவு.
· வேலூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் 58,696 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் 31.05.2026 தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேளாண் அடுக்கக திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் , அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. வேளாண் அடுக்கக திட்டத்தில் தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் தவணை வழங்கப்ப...